சினிமா செய்திகள்

கணவரை கழட்டிவிட பிளான் போடும் நடிகை.. 67 வயது இயக்குனருடன் காட்டும் நெருக்கம்

By Vijay · 31 மே 2022 · Updated 07 மார்ச் 2026
gossip

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த அவர் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புது புது நடிகைகளின் வரவால் தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்காத இவர் திடீரென வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஏற்கனவே அந்த நடிகை பிரபலம் ஒருவரை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறிய நிலையில் திடீரென வேறொருவரை திருமணம் செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு நடிகையும் அதிக திரைப்படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடிகை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் கணவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று விடுவதால் தற்போது அவர் நடிக்கவும் களமிறங்கியுள்ளார். அதற்காகத்தான் அவர் இப்படி தாராளமாக போட்டோக்களை பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு முக்கிய வேடங்கள் கிடைக்காமல் அல்லாடும் நடிகைகளுக்கு மத்தியில் இந்த நடிகை தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு காரணமே 67 வயதான அந்த பிரபல இயக்குனர் தானாம். சமீபத்தில் நடிகை அந்த இயக்குனரை கட்டிப்பிடித்தபடி எடுத்துக்கொண்ட போட்டோ திரையுலகையே மிரள விட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகை தற்போது அவருடன் பார்ட்டி, டூர் என்று நெருக்கம் காட்டி வருகிறாராம்.

கூடிய விரைவில் அவர் தன் கணவரை கழட்டி விட்டு இந்த இயக்குனர் உடனே செட்டில் ஆகலாம் என்ற முடிவிலும் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. 90 கிட்ஸ்களை தன் துள்ளலான நடிப்பால் கவர்ந்த நடிகை இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பது பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. இருந்தாலும் சம்மந்தப்பட்ட நடிகையோ இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தன் போக்கில் ஜாலியாக இருக்கிறார்.