சினிமா செய்திகள்

Ghilli Collection: லால் சலாம் வசூலை நெருங்கிய கில்லி.. ரீ ரிலீசில் செய்த சாதனை, 9 நாளில் இத்தனை கோடியா.!

By Vijay · 29 ஏப் 2024 · Updated 29 ஏப் 2024
ghilli-lal salaam

Ghilli Re Release: இப்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் வந்துவிட்டது. அதில் தற்போது விஜய்யின் கில்லி மீண்டும் வெளியாகியுள்ளது. எத்தனையோ முறை இதை டிவியில் பார்த்திருந்தாலும் முதல் முறை பார்ப்பது போல் ரசிகர்கள் இதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதுவே இப்படத்தின் பெரும் சாதனையாக இருக்கிறது. அதன்படி இப்படம் வெளியாகி இரண்டாவது வாரம் தொடங்கிய நிலையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கில்லி மீண்டும் வெளியான 9 நாட்களில் 28 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இதன் மூலம் இதுவரை ரீ ரிலீஸ் ஆன படங்களின் சாதனையையும் முறியடித்திருக்கிறது.

சாதனை படைக்கும் கில்லி

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் படத்தின் வசூலையும் நெருங்கி விட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்த இப்படம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படம் வெளியாகி தோல்வியை கண்ட நிலையில் வெறும் 36 கோடிகளை மட்டுமே வசூலித்தது. இதை வைத்து பார்க்கும் போது கில்லி இன்னும் சில நாட்களில் இந்த வசூலை தாண்டி விடும் என்றும் தெரிகிறது.

அதேபோல் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என இதை கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது வரை 432000 டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இது 5 லட்சத்தை தாண்டி விடும் என்கின்றனர். அந்த வகையில் படத்தில் விஜய் செல்வது போல் எல்லா இடத்திலும் கில்லி என நிரூபித்து விட்டார்.