சினிமா செய்திகள்

வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல ஹீரோயினா.? டபுள் மீனிங் மன்னன் செய்த சித்து வேலை

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை என்னும் படத்தில் நடிகராய் அறிமுகமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி

By Arun · 08 ஆக 2023 · Updated 10 மே 2025
venniradai-moorthy

ComedianVenniradai moorthi: சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகவும், குணச்சித்திர நடிகர் ஆகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்ற இவர் எண்ணற்ற படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருக்கிறார். இந்நிலையில் ஹீரோயினை மணந்த டபுள் மீனிங் மன்னன் செய்த சித்து வேலை குறித்த தகவலை இங்கு காண்போம்.

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிறாடை என்னும் படத்தில் நடிகராய் அறிமுகமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. தன் பாடி லாங்குவேஜ் ஆளும், வசனத்தாலும் இரு அர்த்தங்களை வெளிக்காட்டி மக்களின் பேராதரவை பெற்றவர். இந்நிலையில் அக்காலகட்டத்தில் சக நடிகையாய் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த மணிமாலாவை விரும்பினார்.

அதன் பின் இவர்கள் இருவரும் திட்டம் போட்டு ஐந்து வருடம் பழகு உள்ளார்கள். இவர்கள் இருவர் இடையே இருந்து வந்த நட்பு என்றாவது காதலாக மலரும் என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்கள் இடையே இருந்து வந்தது. மேலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் தனியே சென்று போய் பேசும் பழக்கம் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு ஒரு முறை சினிமா சார்பில் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், மணிமாலாவும் இந்நிகழ்ச்சிக்கு வந்தார். அன்றுதான் இவர்கள் இருவரிடையே மறைமுகமாக இருந்த வந்த காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். அதைத்தொடர்ந்து இவர்களின் அன்பை பாராட்டும் விதமாய் மனோ என்னும் மகன் பிறந்தான். அவ்வாறு தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் டபுள் மீனிங் மன்னனாய் வலம் வந்த வெண்ணிற ஆடை மூர்த்தி ஐந்து வருட காதலுக்கு பின்னே மணிமாலாவை மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே ஹீரோவாய் நடித்து, அதன் பின் நகைச்சுவை நடிகராய் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவரின் மனைவி ஹீரோயினா என்பது பலர் அறியாத விஷயம். தற்போது 87 வயது ஆகும் வெண்ணிற ஆடை மூர்த்தி தன் மனைவி மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தும் விதமாய் 80வது கல்யாணத்தை சிறப்புற நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.