சினிமா செய்திகள்

ரிலீசுக்கு முன்பே லாபம் பார்த்த ஜனநாயகன்.. 350 கோடிக்கு மேல் பிசினஸ்

By Arun · 03 ஏப் 2025 · Updated 03 ஏப் 2025
jana nayagan

Vijay : விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கும் இப்படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், மமீதா பைஜு, ப்ரியாமணி என எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்கின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் 350 கோடிக்கு மேல் பிசினஸ் செய்துள்ளது.

இதனால் ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் படம் பல கோடி லாபம் பார்த்திருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் 121 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

350 கோடிக்கு மேல் பிசினஸ் செய்த ஜனநாயகன் படம்

அடுத்ததாக சேட்டிலைட் உரிமையை சன் டிவி 68 கோடிக்கு பெற்றுள்ளது. மேலும் ஓவர்சீஸ் ரைட்ஸ் 75 கோடி மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமை 100 கோடிக்கும் வியாபாரம் ஆகி இருக்கிறது.

மேலும் தமிழ்நாடு திரையரங்க உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றிருக்கிறது. ஆகையால் இதுவே கிட்டத்தட்ட 364 கோடியை எட்டி இருக்கிறது. இதனால் இப்போதே லாபக் கணக்கில் ஜனநாயகன் படம் நுழைந்துள்ளது.

தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ‌ இதில் எப்படியும் 500 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.