Vairamuthu: குருவி உக்கார, பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவின் நிலைமை.
ஒன்பது வருடங்களுக்கு முன்னால் தனக்கு நீதி வேண்டும் என்று குரல் கொடுத்தார் சின்மயி. அப்போதெல்லாம் பெரிய அளவில் பேசப்படாத இந்த விஷயம் இப்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வருகிறது.
மொத்தமாய் டேமேஜ் ஆன வைரமுத்து
மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த தக் லைப் படத்தில் வரும் முத்தமழை பாடல் தான் சின்மயிக்கு நீதி வாங்கி கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். பாட்டு நல்லா இருக்குது என பாராட்டுதலோடு விடாமல் ஒன்பது வருஷ கதையை தோண்டி எடுத்து விட்டார்கள்.
இதில் தற்போது திக்கி திணறிக் கொண்டிருப்பவர் வைரமுத்து. நாட்டில் நடக்கும் பிரச்சனையை திசை திருப்ப சினிமா சம்பந்தப்பட்ட விஷயத்தை கிளப்பி விடுவது உண்டு. அதே வேலையை தனக்கு சாதகமாக ஆக்கி இருக்கிறார் வைரமுத்து என நெட்டிசன்கள் கொந்தளித்திருக்கிறார்கள்.
வைரமுத்து இன்று தன்னுடைய பாடல் வரிகளை திரைப்படத்தின் தலைப்புகளாக வைக்கிறார்கள். இது குறித்து ஒரு பேச்சுக்காவது என்னிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என அறிக்கை விட்டிருக்கிறார். அதனுடன் சேர்த்து ஒரு சில பட தலைப்புகளையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இத்தனை வருடங்கள் சும்மா இருந்துவிட்டு இப்போது இந்த காப்புரிமை பிரச்சனையை கிளப்புவது சின்மயி பிரச்சனையை திசை திருப்பவே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.