கமலை வைத்து விளம்பரம் தேடிய விஜய் டிவி.. ரெண்டு வருஷம் ஆச்சு, வாய்ப்பில்லாமல் புலம்பும் பிரபலம்

உலகநாயகன் கமலஹாசன், சொன்ன வாக்கில் உறுதியாக நிற்பவர் என்ற பெயரை எடுத்தவர். ஆனால் அவர் கொடுத்த வாக்கை நம்பி இரண்டு வருஷமாக காத்திருக்கும் பிரபலத்திற்கு தற்போதுவரை விடிவுகாலம் இல்லை. கமல் சொன்னதை நம்பி காத்திருந்தால் வருடங்கள்தான் ஓடியுள்ளது.

அதாவது கமலஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கவின், முகின் ராவ், சாண்டி, லாஸ்ஸியா, தர்ஷன், சேரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதில் பலருக்கு ஹீரோ வாய்ப்புகள் கிடைத்து படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் மேடையில் கமலஹாசன் தர்சனுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்.

அதாவது தனது நிறுவனத்தில் தர்ஷனை நடிக்க வைப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆனால் கமல் விக்ரம் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயன், உதயநிதி, பகத் பாசில் போன்ற நடிகர்களின் படத்தை தயாரிக்கிறார் கமலஹாசன்.

ஆனால் இவரை நம்பி இரண்டு வருஷமாக காத்திருக்கும் தர்ஷனுக்கு ஒரு நல்ல செய்தியும் சொல்லாமல் உள்ளார். இந்தியன் 2 படத்திலாவது தர்ஷனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை கமல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியன் 2 பெயர் பட்டியலிலும் தர்ஷன் பெயர் இடம்பெறவில்லை.

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக கமலஹாசன் பட வாய்ப்பு தருவார் என நல்ல படங்களை தவறவிட்டு உள்ளார். ஆனாலும் எப்போதுமே சொன்ன வாக்கை உலகநாயகன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தர்ஷன் உள்ளார் என கூறப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →