அமரன் பட்ஜெட்டால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி.. ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு

Amaran Movie : கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இப்போது உள்ள இளம் நடிகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

இந்த படம் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதோடு இந்த படத்தின் பட்ஜெட் பெரிய தொகையில் தான் எடுக்கப்பட்டு வருகிறது.

காரணம் அமரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனாலும் தற்போது வரை சொன்ன பட்ஜெட்டை தாண்டி 25 கோடி அதிகமாக செலவாகி உள்ளதாம். ஏற்கனவே கமல் அமரன் படக்குழுவை அழைத்து படத்தின் பட்ஜெட் அதிகமாக போகிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இன்னும் ஒரு மாத சூட்டிங் அமரன் படத்திற்கு மிச்சம் இருக்கிறதாம். எனவே இதற்கு இன்னும் 20 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் கமல் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயனை நம்பி பல கோடி முதலீடு செய்து வருகிறார்.

மேலும் மே மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். ஏனென்றால் அமரன் படம் ராணுவ வீரர் பற்றிய கதை என்பதால் சுதந்திர தினத்தன்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து இருக்கின்றனர்.

மேலும் பட்ஜெட் அதிகமாக கமலுக்கு தலைவலியாக இருந்தாலும் ரிலீசுக்கு பின்பு நல்ல வசூலை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயனும் கடைசியாக நடித்த பிரின்ஸ் மற்றும் அயலான் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் அமரன் படத்தின் மீது நம்பிக்கையில் இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →