பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். முதலில் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் யார் யார் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதலாவதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் ராகவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யா கலந்து கொள்ள உள்ளார். இதைத்தொடர்ந்த தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் ஷாம் விஷால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கலந்துகொள்ள இருக்கிறார்.

மேலும் சினிமா நடிகர் மற்றும் பாடகி சுஜித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக் பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராக பங்கு பெறுகிறார். அசுரன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்த டி ஜே அருணாச்சலம் இப்போட்டியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து ஆகியோர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாடலிங் துறையில் இருந்து அஜய் மெல்வின் என்பவரை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இதனால் இந்த சீசன் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்றுவதற்காக பிக் பாஸ் சீசன் 6 இக்கு ஒவ்வொரு போட்டியாளரையும் தேடிப்பிடித்து பொறுக்கி எடுத்துள்ளனர். இப்போதே பிக் பாஸ் சீசன் 6 சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →