விக்ரம் ஆடியோ லான்ச் அலற விட்ட சிம்பு.. ஆண்டவர் கிட்ட இத கத்துக்கணும்

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் நீண்ட வருடங்களுக்குப் பின் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் நல்லதொரு வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சமீபத்தில் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.

நடிகர் கமலஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரும் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதனிடையே இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது கமல் 50, நிகழ்ச்சியில் தான் பங்கேற்ற போது, என்னால் மேடையேறி பேச முடியாமல் போனது அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது விக்ரம் ஆடியோ லான்ச்சில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த கமல்சாருக்கு நன்றி என சிலம்பரசன் தெரிவித்தார். மேலும் எனக்கு எப்படி எனது தந்தை திரைக்குப்பின் குருவோ அதேபோல நடிகர் கமலஹாசன் எனக்கு திரைக்கு முன் குரு என்று வெளிப்படையாகக் கூறினார்.

மேலும் தான் எந்த ஒரு நடிகர்களின் பிரச்சினைகளிலும் பெரிதாக கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் கமல் சாரின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் காலை ஐந்து மணிக்கே எழுந்து கமல் சாரின் வீட்டிற்குப் போய் சென்று அவருடன் இருந்து வந்தேன். அந்த அளவுக்கு எனக்கு கமல் சார் மிகவும் பிடிக்கும் என்று நடிகர் சிம்பு தெரிவித்தார்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசிய சிம்பு, இளம் வயதிலேயே இவ்வளவு ஸ்டார்களை வைத்து படம் இயக்குவது என்பது சாதாரணமான விஷயமல்ல, லோகேஷ் அதை செய்து காட்டியுள்ளார். கண்டிப்பாக இத்திரைப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பேன் இந்தியா என்று தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள் சற்று அந்த மருதநாயகம் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை வெளியிடுங்கள் அப்போது தெரியும் எது உண்மையான பேன் இந்தியா திரைப்படம் என்று சிம்பு பளிச்சென்ற பேசியுள்ளார்

மேலும் நடிகர் விஜய் சேதுபதி பற்றி பேசிய சிம்பு,என்னுடன் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்தபோது விஜய் சேதுபதி அனைவரிடமிருந்தும் நடிப்பை கற்றுக் கொள்ளக் கூடியவர்.எப்படி மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலோ அதேபோல தமிழகத்தில் விஜய் சேதுபதி என்று புகழாரம் சூட்டினார். மேலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடன இயக்குனர் சான்டியுடன் பத்தல பத்தல பாடலுக்கு நடனமாடி தன்னுடைய உரையை நிறைவு செய்தார் சிம்பு.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →