விக்ரம் படத்தால் பெயரைக் கெடுத்துக் கொண்ட லோகேஷ்.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல!

விக்ரம் படத்தால் லோகேஷ் கனகராஜ் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார். உலகநாயகனுக்கு சரியான கம்பேக் படமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதைக்கு ஏற்றாற்போல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் லோகேஷ்.

இவருடைய இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர் என ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார். தற்போது விக்ரம் படம் வெளியாகி எல்லாத் தரப்பு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்திராத புதிய முயற்சியை விக்ரம் படத்தில் லோகேஷ் கையாண்டிருந்தார். அதாவது கைதி படத்தில் உள்ள சில சம்பவங்களையும், கதாபாத்திரத்தையும் விக்ரம் படத்தில் லோகேஷ் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால் விக்ரம் படத்தால் லோகேஷ்க்கு கெட்ட பெயரும் வந்துள்ளது. அதாவது லோகேஷின் முந்தைய படங்கள் சொன்ன பட்ஜெட்டில், சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார். இதனால் சொன்ன வாக்கை காப்பாற்ற கூடியவர் லோகேஷ் என அனைவரிடமும் நற்பெயரை சம்பாதித்து இருந்தார்.

ஆனால் விக்ரம் படம் சொன்ன பட்ஜெட்டை விட பலமடங்கு எகிறி உள்ளது. மேலும் சொன்ன தேதியிலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் லோகேஷ் இதுவரை கட்டிக் காப்பாற்றி வந்த பெயரை விக்ரம் படத்தில் தவறவிட்டுள்ளார்.

மேலும் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கயுள்ளார். இப்படத்திற்கு ஆறு மாதம் மட்டுமே அவகாசம் கேட்டுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக இருக்கும் என கூறியிருந்தார். அதனால் இப்படத்திலாவது சொன்ன பட்ஜெட்டில், சொன்ன தேதியில் எடுத்த முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →