அனிமல் படத்தை காரி துப்பிய சினிமா பிரபலங்கள்.. சைடு கேப்பில் கொண்டாடப்படும் நெல்சன்

Animal – Nelson : கடந்த டிசம்பர் மாதம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் அனிமல் படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு விமர்சனங்கள் மோசமாக வந்தாலும் வசூலை வாரி குவித்தது. அனிமல் படம் இப்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் தியேட்டரில் பார்க்க தவறிய பிரபலங்கள் இப்போது அனிமல் படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது ராதிகா சரத்குமார் படத்தை பார்த்துவிட்டு பெயரை குறிப்பிடாமல் வாந்தி வருவது போல் படத்தை எடுத்து வைத்துள்ளனர் என பதிவிட்டிருந்தார்.

அடுத்ததாக பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படத்தை பார்த்து மிகவும் கடுப்பாகிவிட்டார். அதாவது அனிமல் படம் அனிமல்களுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மிருகத்தனமான இந்தப் படத்தை எடுத்து இருக்கின்றனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இயக்குனர் மற்றும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தை ஆகா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் அனிமல் படத்தை விமர்சனம் செய்து இணையத்தில் ஒரு மீம்ஸ் பரவியது. அனிமல் படம் நல்லா இருக்குன்னு சொல்றவங்க எல்லாரும் டாக்டர் படத்தை பாருங்க என்று நெல்சனின் புகைப்படத்துடன்
ஒரு மீம்ஸ் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

பான் இந்திய படமாக வெளியான அனிமல் படத்தை விமர்சிக்கும் போது நெல்சன் படத்தை பாராட்டியதால் இப்போது அவர் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம். சம்பந்தமே இல்லாமல் அனிமல் படத்தால் இப்போது நெல்சனுக்கு பாராட்டுக்கள் ரசிகர்களால் குவிந்து வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்ற போதும் அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூருக்கு ஃபிலிம்பேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →