விக்ரம் பிரபுவை மிரளவைத்த பொன்னியின் செல்வன் கேரக்டர்.. சூடுபிடிக்கும் புரோமோஷன்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் சோழ ராஜ்ஜியத்தை கண்முன் காட்டி உள்ளார் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தின் முதல் பாகம் இந்த மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனால் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, மணிரத்தினம், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

பட புரமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு பொன்னியின் செல்வன் படத்தில் டயலாக் மறந்த கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார். பெங்களூர், சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் பொன்னியின் செல்வன் டீம் ரவுண்ட் கட்டி படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர்.

அப்போது பொன்னின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு, அந்தப் படத்தில் நடித்த நடிகர் ஒருவரால் தன்னால் நடிக்கவே முடியவில்லை என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதாவது இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விக்ரமுடன் தான், விக்ரம் பிரபுவுக்கு அதிக காட்சிகள் இருந்தது. அப்போது அவரோடு இணைந்து நடிக்கும்போது அவருடைய நடிப்பால் பிரமித்து டயலாக்கை மறந்து வியப்புடன் நின்றதாக தெரிவித்திருக்கிறார்.

விக்ரமின் நடிப்பு சிங்கம் போன்று கர்ஜனையுடன் இருந்ததாகவும், இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் எல்லா நடிகர்களின் நடிப்பையும் ரொம்பவே ரசித்து பார்த்ததாகவும் விக்ரம் பிரபு மனம் திறந்து பேசினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →