பழைய எனர்ஜியுடன் களம் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. 32 வருடங்களுக்குப் பிறகு மாஸ் இயக்குனருடன் கூட்டணி

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய எனர்ஜியுடன் மிகுந்த மகிழ்ச்சி ஆக உள்ளார். அண்மையில் தீபாவளி பண்டிகையில் கூட தனது பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரஜினிகாந்த் கொண்டாடி இருந்தார். இந்நிலையில் ரஜினி ஒரு படத்தை முடித்த பின்பு தான் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

ஆனால் இப்போது அடுத்த அடுத்த படங்களில் ரஜினி கமிட் ஆகி வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்த இளம் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை பிரமாண்டமாக லைக்கா ப்ரொடக்‌ஷன் தயாரிக்க உள்ளது. இந்த சூழலில் தலைவர் 171 படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 32 வருடங்களுக்குப் பிறகு மாஸ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மம்முட்டி, ரஜினி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தளபதி. இப்படத்தை தொடர்ந்து பலமுறை மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு வந்தும் சில காரணங்களினால் தடைப்பட்டது. இப்போது மணிரத்தினம் மற்றும் ரஜினி ஒரு படம் பண்ணப் போகிறார்களாம்.

அதற்கான கதையை தற்போது மணிரத்தினம் தயார் செய்து வருகிறாராம். தளபதி 2 போல் இந்த படத்தின் கதை இருக்க வேண்டும் என மணிரத்தினம் இடம் ரஜினி கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் மீண்டும் ரஜினி மற்றும் மணிரத்தினம் இணைய போவது உறுதி ஆகி உள்ளது.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்த அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் படத்தை மணிரத்னம் இயக்க உள்ள அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →