சூப்பர் ஸ்டார் குடும்பத்தோடு பார்க்கும் ஒரே சீரியல்.. ஜெய்லர் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பருத்திவீரன் திரைப்படம் புகழ் சரவணன் ஜெயிலர் படத்தில்நடிக்கிறார். இந்நிலையில் ரஜினி தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சீரியலை மட்டும் தவறாமல் பார்ப்பாராம் என்பதை அவரே வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதாவது ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தின் இடைவெளியில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருசெல்வத்தின் நண்பர் ஒருவர் ரஜினியை சந்தித்துள்ளார். அப்பொழுது ரஜினி, தான் குடும்பத்தோடு சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பார்ப்பதாகவும் மிக அருமையான கதை களத்தை கொண்ட தொடராக அமைந்துள்ளதையும் திருசெல்வத்தின் நண்பரிடம் ரஜினி கூறியுள்ளார்.

இதனை எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். மேலும் கடந்த வாரம் டிஆர்பி-யில் 2-ம் இடத்தை பிடித்திருக்கும் புத்தம் புதிய சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல், ஆணாதிக்க தோடு இருக்கும் ஒரு சிலரைப் பற்றியதாகவும் அவர்களுடைய குணத்தால் கஷ்டப்படும் பெண்களின் மனக்குமுறலை சொல்வதாகவும் சீரியல் அமைந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி மீண்டும் வீட்டிற்கு வந்து எதிர்பாராத திருப்பங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆதி குணசேகரன் குடும்பத்தில் பட்டம்மாள் பாட்டிக்கு சொத்தில் 40% இருப்பதை வைத்து குடும்பத்தை கதிகலங்க வைத்துள்ளனர்.

இரவு 9.30 மணிஅளவில் ஒளிபரப்பாகும் இத்தொடரை அதற்கு முன்பாகவே ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இப்படி சின்னத்திரை ரசிகர்களின் மனதை மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனதையும் கவர்ந்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல் இனி வரும் நாட்களில் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடிப்பதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →