இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை.. ஒரு வேளை கமலுக்கு டூப்பா இருப்பாரோ!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. கோவிட் தொற்று மற்றும் சில காரணங்களினால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உதயநிதி தலையிட்டு தற்போது பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ், ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இப்போது முதல்முறையாக தமிழில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார். இவர் எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர்.

ஒருமுறை யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அதற்கு காரணம் கேப்டன் தோனி தான் என யோக்ராஜ் குற்றம் சாட்டியிருந்தார். அது அப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது யோக்ராஜ் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக மேக்கப் போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை இந்தியன் 2 படத்தில் கமலுக்கு டூப்பாக யோக்ராஜ் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஏனென்றால் கமல் தற்போது பிக் பாஸ், மற்ற பட வேலைகள் என பிசியாக உள்ளார். இதனால் சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமலுக்கு டூப்பாக யோக்ராஜ் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

யோக்ராஜ் இந்தப் புகைப்படத்துடன் கமலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு மேக்கப் போடும் கலைஞர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியீட்டுக்காக தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முமரமாக நடந்து வருகிறது.

Yograj
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →