பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா

இப்போது எங்கு பார்த்தாலும் பத்து தல படத்தைப் பற்றிய பேச்சு தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் சிம்புவின் மார்க்கெட் உச்சம் தொட்டு நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் பத்து தல படத்தில் நடித்து உள்ளார்கள்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதை முன்னிட்டு இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பத்து தல படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது பத்து தல படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா ராவடி என்ற ஒரு குத்துப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடலின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரபல நடிகைகள் இதுபோன்ற ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆடி நிறைய சம்பாதித்து வருகிறார்கள்.

அந்த வகையில் டாப் நடிகையான சமந்தா கூட புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நிலையில் பத்து பல படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதற்காக ஆயிஷாவுக்கு 40 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆகையால் சாயிஷாவுக்கே இவ்வளவு என்றால் பிரியா பவானி ஷங்கருக்கு எவ்வளவு சம்பளம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடம் இருந்தது.

ஆனால் பிரியா பவானி ஷங்கருக்கு பத்து தல படத்தில் நடித்ததற்காக 70 லட்சம் மட்டும் தான் சம்பளம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாடல் ஆடியோ சாயிஷாவுக்கு 40 லட்சம் கொடுக்கப்படும் நிலையில் பிரியா பவானி சங்கருக்கு ஒரு கோடியாவது சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதனால் தான் இப்போது பெரிய நடிகைகள் எல்லாம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே நிறைய சம்பாதித்து விடலாம் என்று கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. மேலும் படம் பத்து தல படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.