சினிமா செய்திகள்

அம்மாவுக்காக விஜய் கட்டிய கோயில்.. தரிசனம் செய்த ரஜினியின் சிஷ்யன், வைரல் புகைப்படங்கள்

By Arun · 13 ஏப் 2024 · Updated 13 ஏப் 2024
vijay-rajini

Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ள நிலையில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இப்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

கோட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் நாளை இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. இந்நிலையில் தனது அம்மாவுக்காக விஜய் சாய்பாபா கோவில் கட்டி இருக்கிறார்.

இதில் ரஜினியின் தீவிர ரசிகன் மற்றும் சிஷ்யன் இன்று சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். அந்த போட்டோக்கள் தான் இணையத்தில் காலை முதலே ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

விஜய் கட்டிய கோயிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்

raghava-lawrence
raghava-lawrence

அதாவது ரஜினியின் வழியை பின்பற்றி வரும் ராகவா லாரன்ஸ் தான் சாய்பாபா கோயிலுக்கு சென்றிருந்தார். மேலும் தனது எக்ஸ் தளத்தில் கோயிலுக்கு சென்ற வீடியோவுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

ஷோபா உடன் ராகவா லாரன்ஸ்

sobha-lawrence
sobha-lawrence

நண்பன் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு அவரது தாயார் ஷோபா உடன் சென்றிருந்தேன். நான் ராகவேந்திரா கோயிலை கட்டிய போது ஷோபா அம்மா வந்து ஒரு பாடலை பாடினார்.

ராகவா லாரன்ஸ் பதிவு

lawrence-tweet
lawrence-tweet

இன்று அவருடைய கோயிலுக்கு செல்வதில் தனக்கு மகிழ்ச்சி. மேலும் அந்த கோயிலில் தெய்வீகத்தை தான் உணர்ந்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.