சினிமா செய்திகள்

Bayilvan Ranganathan: உனக்கு வந்தா ரத்தம் எனக்கு தக்காளி சட்னியா.. பயில்வான் மகளின் அந்தரங்கத்தை போட்டு உடைத்த ஷகிலா

By Vijay · 06 மே 2024 · Updated 06 மே 2024
bayilvan-shakeela

Bayilvan Ranganathan: பத்திரிக்கையாளராக இருந்தாலும் யூடியூப் தான் பயில்வான் ரங்கநாதனை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை புட்டு புட்டு வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

இதனால் இவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அவ்வளவு ஏன் நடுரோட்டில் இவரிடம் மல்லுக்கு நின்ற நடிகைகளும் உண்டு. ஆனாலும் இவர் நான் சினிமாவை சுத்தப்படுத்துகிறேன் என்று தன் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரை தலைகுனிய வைக்கும் விதமாக ஷகிலா நறுக்கென்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதில் ஷகிலா பயில்வானை சரமாரியாக வறுத்தெடுத்துள்ளார். அவர் சொன்ன ஒரு விஷயம் தான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது பயில்வானுடைய கடைசி பெண் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்பதுதான்.

பயில்வானை மூக்குடைத்த ஷகிலா

இதை ஷகிலா பகிரங்கமாக கேட்ட நிலையில் பயில்வான் உங்கள் நாக்கு அழுகிடும் என கடும் கோபத்தோடு பதிலளித்தார். ஆனால் அவரோ இதற்கு ஆதாரம் இருக்கிறது. இதை நேரில் பார்த்த என்னுடைய நண்பர் தான் கூறினார் என தெரிவித்தார்.

ஆனாலும் பயில்வான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இதை பார்த்தால் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னி கதையாக தான் இருக்கிறது.

அடுத்த வீட்டு பெண்களைப் பற்றி பேசும் போது வராத கோபம் தன்னுடைய பெண் என்றதும் வந்துவிட்டது. இதைத்தான் ஷகிலா நறுக்குன்னு கேட்டு பயில்வான் மூக்கை உடைத்தார்.