Simbu: வெற்றியை நோக்கி ஓடும் போது அகலக்கால் வைத்து விடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அகல கால் என்ன பறந்தே வெற்றியை அடைய வேண்டும் என ஏடாகூடமான வேலையை செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.
2020இல் இனி எல்லாம் சினிமா தான் என்று வந்த சிம்புவை சினிமாவும் வாழ வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல என்று தொடர் வெற்றிகள் கொடுத்தார்.
அவருடைய சக போட்டியாளர் தனுஷ் ஆக இருக்கட்டும், அவருக்கு பின்னால் சினிமாவுக்கு வந்து இன்று முக்கிய அடையாளத்தை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனாக இருக்கட்டும் இவர்களை முந்தவேண்டும் என சிம்பு நினைப்பது உண்மையாகவே பாராட்டுதலுக்குரிய விஷயம் தான்.
ஆனால் அது படிப்படியாக நடக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்க வேண்டும். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் இடத்தை பிடிக்க அவர்களுடைய சம்பளத்தை போல் நாம் சம்பளம் வாங்கினால் போதும் என குறுக்கு வழியில் யோசித்து விட்டார் போல.
தயாரிப்பாளர்களிடம் இந்த இரண்டு பேரும் வாங்கும் சம்பளத்திற்கு நிகராக சிம்பு கேட்கிறாராம். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் எளிதாக இப்படி ஒரு இடத்திற்கும் வரவில்லை, இப்படி ஒரு சம்பளத்தையும் வாங்கவில்லை.
அவர்கள் கொடுத்த வெற்றி, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தான் அவர்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறிருக்கிறது. அதை ஒப்பிடும்போது இப்போதைக்கு சிம்பு அந்த இலக்கை அடையவில்லை.
அப்படி இருக்கும்போது சம்பளம் மற்றும் அந்த இலக்க எண்களில் வர வேண்டும் என்று நினைப்பது தவறு. உடம்பை குறைக்க பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்ட சிம்புவுக்கு, உச்சியை அடைய ஏனோ பொறுமை இல்லாமல் போய்விட்டது.