சினிமா செய்திகள்

2 நாளில் இத்தனை லட்சம் உறுப்பினர்களா.? மீடியாவை ஸ்தம்பிக்க வைத்த தளபதியின் TVK

By Vijay · 10 மார்ச் 2024 · Updated 12 மே 2025
tamilaga vetri kalagam-vijay

Vijay-TVK: கடந்த இரண்டு நாட்களாகவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மீடியாக்களின் கவனம் அவர் மீதுதான் இருக்கிறது. அதுவும் மகளிர் தினத்தில் அவர் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ யாரும் எதிர்பாராதது.

அதன்படி தன்னுடைய கட்சியின் முக்கிய அணிக்கு மகளிரை தலைமை ஏற்க வைத்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார் விஜய். அதை தொடர்ந்து மகளிர் தினமான கடந்த எட்டாம் தேதி மாலை உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதள லிங்கை விஜய்யின் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.

அது மட்டும் இன்றி அதில் முதல் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ மூலமாக மக்களிடம் பேசினார். அதில் இந்த கட்சியில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணையலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும் இதில் இணைவதற்கான வழிமுறைகளும் மிகவும் சுலபமானது தான்.

நான் முதல் உறுப்பினராக இணைந்து விட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டார். இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் உடனே அந்த லிங்கை ஓபன் செய்து உறுப்பினராக தொடங்கினார்கள். அதை அடுத்து சில நிமிடங்களிலேயே கட்சியின் சர்வர் செயலிழந்து போனது. இதையும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கெத்து காட்டி வந்தனர்.

அதை அடுத்து பிரச்சனை சரி செய்யப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே தற்போது 50 லட்சம் மக்கள் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுவரை தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் பெரிய கட்சிகள் கூட இப்படி ஒரு சாதனையை செய்தது கிடையாது. தற்போது இரண்டு கோடி உறுப்பினர்கள் தான் இலக்கு என்ற தீர்மானத்தில் இருக்கும் இக்கட்சி விரைவில் அதை சாதித்து காட்டி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.