சினிமா செய்திகள்

Suchitra: தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம்.. பிரபலத்தின் மகளை கொச்சைப்படுத்தும் சுச்சி லீக்ஸ்

By Vijay · 14 மே 2024 · Updated 15 மே 2024
dhanush-aishwarya

Suchitra: சுசித்ராவின் ஒரே ஒரு பேட்டி இன்று ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் திசை திருப்பி இருக்கிறது. ஏற்கனவே ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து செய்தி அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதில் சுசித்ரா தன் பங்குக்கு பல விஷயங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதிலும் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பற்றி அவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

என்னவென்றால் ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மாவே கிடையாது. அவர் எப்போதுமே தன்னை பற்றி மட்டும்தான் யோசிப்பார். இந்த விஷயத்தில் தனுஷுக்கு தான் என்னுடைய ஆதரவு இருக்கிறது.

ஐஸ்வர்யா நல்ல அம்மா கிடையாது

விவாகரத்துக்கு பிறகு தான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பது போல் அவர் காட்டிக் கொள்கிறார். ஆனால் தனுசுடன் இருக்கும் போது அவருடைய திறமையை யாரும் கட்டுப்படுத்தவில்லை.

அதேபோல் தனுஷ் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதே அளவுக்கு ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையில் இருக்கும்போதே டேட்டிங் செய்து இருக்கிறார்.

இதன் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தனர் என சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இருவரும் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதில் சுசித்ராவின் கருத்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.