சினிமா செய்திகள்

தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட்.. பிகில் பாணியை கையில் எடுக்கும் வெங்கட் பிரபு

லியோ படத்தின் ஹைப் எந்த விதத்திலும் தளபதி 68 ஆல் பாதிக்கப்படக் கூடாது என்பதில் விஜய் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்.

By Arun · 28 ஆக 2023 · Updated 10 மே 2025
Thalapathy 68

Thalapathy 68 Update: தளபதி விஜய்க்கு தற்போது அடுத்த ரிலீசுக்கு காத்திருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உடன் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு உள்ளே அவருடைய 68 வது படத்தின் அப்டேட் வெளியாகிவிட்டது.

லியோ படத்தின் ஹைப் எந்த விதத்திலும் தளபதி 68 ஆல் பாதிக்கப்படக் கூடாது என்பதில் விஜய் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். இதனால் அந்த படத்தின் அப்டேட் பற்றி எந்த செய்தியும் வெளியாகாமல் இருக்கிறது. இருந்தாலும் அதனைத் தாண்டி அவ்வப்போது தளபதி 68 பற்றி ஒவ்வொரு விஷயங்களும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அப்படி தான் தற்போது ஒரு அப்டேட் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே தளபதி 68-யில் நடிகர் ஜெய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதேபோன்று நடிகைகள் ஜோதிகா மற்றும் பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர இருப்பதாக அப்டேட் வெளியானது இரண்டு ஹீரோயின்கள் என்றால் அப்போது விஜய்க்கு இதில் டூயல் கதாபாத்திரம் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது.

மேலும் விஜய் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதில் அப்பா கேரக்டருக்கு நடிகை ஜோதிகாவும், மகன் கேரக்டருக்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. விஜய் ஏற்கனவே பிகில் படத்தில் இது போன்று அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அப்பா கேரக்டரான ராயப்பன் கதாபாத்திரம் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

தற்போது இதில் இந்த அப்பா கேரக்டர் அரசியல் பிரமுகராகவும், மகன் கேரக்டர் ரா ஏஜண்டாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் லியோ படத்தின் ரிலீசுக்கு பிறகு, வரும் நவம்பர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான கதை விவாதம் மற்றும் ஆர்டிஸ்ட் தேர்வு தற்போதைக்கு முடிவடைந்து இருக்கிறது.

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்திற்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்துடன் இணைகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இவன் மற்றும் விஜய் கூட்டணிக்கு தற்போது அதிக அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.