சினிமா செய்திகள்

ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் கவலைப்பட மாட்டேன்.. 40 வயது நடிகைக்கு நச்சுன்னு குவியும் பட வாய்ப்பு

By Arun · 13 செப் 2023 · Updated 07 மார்ச் 2026
gossip-4

அச்சு அசல் கிராமத்துப் பெண் போலவே தன்னுடைய முதல் படத்தில் கதாநாயகியாக நடித்து தேசிய விருதை தட்டி தூக்கிய நடிகை ஒருவர், 40 வயதிலும் நச்சுன்னு இருக்கிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லாமல் போனதால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார்.

அந்த கேரக்டரில் அவர் மிகக் கச்சிதமாக பொருந்தி நடித்ததால் தற்சமயம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

40 வயதானாலும் இன்னமும் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதற்கு எனது கணவர் தான் காரணம். அவரால் தான் என்னால் நடிகையாக இன்னும் வலம் வர முடிகிறது. இப்போதும் என்னை ஆன்ட்டி என கிண்டல் செய்வார்கள். இஷ்டத்திற்கு பாடி ஷேமிங் செய்வதும் உண்டு.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. இப்போதும் நான் கவர்ச்சியாக தான் இருக்கிறேன். அதனாலேயே எனக்கு பட வாய்ப்புகளும் குவிகிறது என்று செம கெத்தாக பேசி இருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த இளம் நடிகைகள் எல்லாம் பொறாமையில் பொசுங்குகின்றனர்.