சினிமா செய்திகள்

30 ஆயிரம் சம்பளத்தில் இருந்து 5 மடங்கு ரஜினியை உயர்த்திய படம்.. வியாபாரத்தை கற்றுக்கொடுத்த முதலாளி

ரஜினியின் சம்பளத்தை உயர்த்தி கொடுத்த தயாரிப்பாளர்.

By Vijay · 26 ஆக 2023 · Updated 10 மே 2025
rajini-old-cinemapettai

Actor Rajinikanth Salary: ரஜினி சினிமாவிற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த படம்தான் 16 வயதினிலே. இப்படத்தில் பரட்டை என்கிற கேரக்டரில் வெறித்தனமான வில்லனாக நடித்தார். இதில் நடித்த பிறகு இவருடைய பேரும் புகழும் உயர்ந்து விட்டது. ஆனால் இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் என்னமோ 3000 ரூபாய் தான்.

ஆனால் மயிலு கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவிக்கு 5000 ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் ரஜினி சம்பளத்தை பற்றி யோசிக்காமல் தொடர்ந்து நடித்து எப்படியாவது உயர வேண்டும் என்று முயற்சி செய்து வந்திருக்கிறார். அதற்கேற்ற மாதிரி இவருக்கும் அதிகமான வாய்ப்புகள் வந்திருக்கிறது.

அதன் பின் ரஜினியின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கடைசியாக 30000 சம்பளத்தை பெற ஆரம்பித்தார். இந்த சம்பளத்தையே பல வருடங்களாக வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பின் எப்படிடா இந்த சம்பளத்திலிருந்து உயர்த்தி கேட்பது என்று இவர் மனசுக்குள்ளேயே போராட்டத்தை நடத்தி வந்தார்.

ஒரு வழியாக சம்பளத்தை உயர்த்தி கேட்டாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தயங்கி தயங்கி இன்னும் பத்தாயிரம் கூடுதலாக வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது இவர் பிரியா படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டிருக்கிறார்.

உடனே அவர் தம்பி நீங்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றியாக போய்க் கொண்டிருக்கிறது. அதனால் உங்களுக்கு தயக்கமே வேண்டாம் இனி உங்களுடைய சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அப்போதையிலிருந்து ரஜினியின் சம்பளம் மட்டும் அதிகரிக்காமல் இவருடைய மார்க்கெட்டும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

30000 வரை வாங்கிக் கொண்டிருந்த இவருடைய சம்பளம் திடீரென்று நான்கு மடங்காக உயர்ந்தது காரணம் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான். அன்றைக்கு ஆரம்பித்தது தான் இவருடைய மார்க்கெட் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு தற்போது ஜெட் வேகத்தில் 72 வயதிலும் பறந்து கொண்டிருக்கிறார்.