சினிமா செய்திகள்

படிப்பு செலவிற்கு உதவி செய்ங்க என கேட்ட சக நடிகர்.. எண்டு கார்டு போட்ட வடிவேலு

தன் எளிமையான வாழ்க்கையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

By Arun · 24 மே 2023 · Updated 09 மே 2025
vadivelu-cinemapettai1

நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வடிவேலுவின் காமெடிகள். அந்த அளவுக்கு நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். ஒரு காலகட்டத்தில் இவரின் நகைச்சுவை இவரை புகழின் உச்சியில் வைத்திருந்தது. அத்தகைய பெருமை வாய்ந்த இவரின் கொடூர குண அம்சம் கேட்பவரை பதப்பதைக்க செய்கிறது.

தன் எளிமையான வாழ்க்கையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர். இவரா இது என்று கேட்கும் அளவிற்கு இவரின் செயல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சினிமா வாழ்க்கை வேறு , நிஜ வாழ்க்கை வேறு என்பதை நிரூபிக்கும் விதமாக இவர் இருந்து வருகிறார்.

படத்தில் காமெடிகளை கொண்டு சிறார் முதல் பெரியோர்கள் வரை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர். நிஜத்தில் இப்படியே உல்டாவாக இருந்து வருகிறார். இதை குறித்து சில நிகழ்வுகளை காணலாம். தன் சொந்த பந்தங்களுக்கு உதவி செய்த இவர் சக நடிகர்களுக்கு கருணை காட்ட வில்லை என்பது தான் உண்மை.

அவ்வாறு இவரிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் உள்ளன. அதில் முக்கியமாக செய்த உதவியை சொல்லிக் காட்டுவது. அவ்வாறு தன்னிடம் சேர்ந்து பயணிக்கும் சக நடிகர்களின் வளர்ச்சியை பிடிக்காதவர். அவற்றில் ஒரு சம்பவமாக பார்க்கையில், சக நடிகர்களின் குழந்தைகள் படிப்பு செலவிற்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கேட்டு வந்தால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வாராம்.

மேலும் அவர்களிடம் தற்போது ஐந்தாயிரம் கேட்பாய் அடுத்தது ஐம்பதாயிரம் கேட்பாய் அடுத்த ஐந்து லட்சம் ரூபாய் கேட்பாய் என்றும் அசிங்கப்படுத்துவாராம். இதோடு நிற்காமல் இனி உனக்கு வாய்ப்பு கிடைக்காது அப்படியே ஓடிவிடு எனவும் கூறுவாராம். அந்த அளவிற்கு இவரின் புத்தி கொடூரமாக இருக்கும் என்று மீசை ராஜேந்திரன் பதிவிட்டு வருகிறார்.

இத்தகைய செய்தி இவர் ஒருவர் மட்டும் கூறி கேட்காமல் பலர் கூறி கேட்டு வருகிறோம். நகைச்சுவையில் ஜாம்பவானாக இருக்கும் இவருக்கு கம் பேக் என்பது கிடையாது. ஒன்லி கோ பேக் மட்டும் தான் என்று பலரின் கோபத்தையும், சாபத்தையும் பெற்று வருகிறார் வடிவேலு.