வாரிசு நடிகையின் 6 மணி அவதாரம்.. மப்பு தலைக்கேறி செய்யும் அட்டூழியம்

பிரபலங்களின் வாரிசுகள் தான் இப்போது அடுத்தடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அப்படி அப்பாவின் புகழின் மூலம் ஹீரோயின் ஆனவர் தான் இந்த வாரிசு நடிகை. ஆரம்பத்திலேயே டாப் இயக்குனர் மற்றும் இளம் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

ஆனால் அடுத்தடுத்த படங்களின் மூலம் இவர் தோல்வியை தான் சந்தித்தார். கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் கண்ட கண்ட பழக்கத்திற்கும் அடிமையானது தான் இதற்கு காரணம் என்கிற தகவல்கள் இப்போது கசிந்து வருகிறது. அந்த அளவுக்கு அம்மணி குடி போதைக்கு அடிமையாகி விட்டாராம்.

நடிக்க வந்த புதிதில் இளம் ஹீரோவுடன் காதலில் இருந்த இவர் அந்த மகாபிரபு நடிகரையும் வளைத்து போட்டார். ஆனால் அதுவும் சில காலம் மட்டுமே ஒர்க் அவுட் ஆனது. அதை தொடர்ந்து வெளிநாட்டு பிரபலத்தை காதலித்து திருமணம் செய்யவும் முயற்சித்தார்.

ஆனால் நடிகையின் ஆறு மணி அவதாரத்தை பார்த்த காதலர் எஸ்கேப் ஆகிவிட்டார். அதை அடுத்து இப்போது வேறு ஒருவருடன் நடிகை தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணி மப்பு தலைகேறினால் தலைகால் புரியாத அளவுக்கு ஆட்டம் போடுவாராம்.

அது மட்டுமல்லாமல் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதி தள்ளி உடம்பையும் கெடுத்துக் கொள்கிறாராம். இப்படியே போனால் மகளின் வாழ்வு பாழாகிவிடும் என அப்பா நடிகரும் சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். ஆனால் அவரையே இந்த வாரிசு எதிர்த்து பேசி சண்டை போட்டிருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →