சினிமா செய்திகள்

ஹீரோயின் உதட்டை ரீ-டேக்கில் 50 முறை பதம் பார்த்த ஹீரோ.! வேறென்ன வேண்டும்.!

முத்த கட்சிக்காக பலமுறை டேக் எடுத்து அதைப் பற்றி அந்த இயக்குனர் அந்த படத்தை பற்றி கூறியிருக்கிறார்.

By Arun · 09 டிசம்பர் 2022 · Updated 06 மே 2025
gossip-actress

தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் படங்களில் முத்தக் காட்சிகள் என்பது ஒரு இயல்பான விஷயமாக மாறிவிட்டது. பெரிய தவறாக பார்க்கப்படுவது கிடையாது. ஒரு படத்தில் பார்க்கும் பொழுது முத்தக்காட்சி ஒரு சில வினாடிகளில் வந்து செல்லும். ஆனால் அது படமாக்கப்படும் பொழுது பலமுறை எடுக்கப்படும்.

அப்படி அந்த காட்சிகளை படமாக்கப்படும் பொழுது ஒரு சில டேக்குகள் வாங்கி எடுத்த படங்கள் ஏராளம். ஆனால் பலமுறை டேக் வாங்கி எடுத்து ஆச்சரிய படுத்திருக்கிற ஒரு திரைப்படம் இருக்கிறது. 2019ல் வெளிவந்த புதுமுகம் நரேன் ராம்தேஜ் கதாநாயகனாகும் பிரெர்னா கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் “வேறென்ன வேண்டும்” இந்த திரைப்படம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் சமூக வலைதளங்கள் பற்றிய கதைதான்.

படத்தில் பிக் பாஸ் தர்ஷன் வில்லனாக நடித்துள்ளார் கடந்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தையும் மக்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு யாரும் அடிமையாகிவிடக் கூடாது என கருத்தையும் வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒரு முத்தக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது நடிகர்-நடிகை புதுமுகம் என்பதால் தயங்கித், தயங்கி நடித்தனர். அது ஒழுங்காக வராத காரணத்தால் 50 டேக்குகள் எடுத்து இந்த முத்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் சிவபாரதி குமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

முதலில் இந்த முத்தக் காட்சிக்கு நடிகை மறுப்பு தெரிவித்திருந்தார். ஒரு சில வினாடிகள் மட்டுமே என்ற அவர் கூறி நடிக்க வைத்தார்கள். ஆனால் இது 50 டேக்குகள் சென்றதால் அவர் இனிமேல் நடிப்பாரா என்ற சந்தேகம் வந்தது. இந்த முத்தக் காட்சியை பார்ப்பதற்காகவே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என நம்புகிறேன் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை இவர் சொன்னதற்கு காரணம் இப்போது புரிகிறது படத்தின் புரமோஷனுக்காக இப்படி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. படத்தின் விளம்பரத்திற்காக இப்படி எத்தனை முறை டேக் வாங்கி முத்தக்காட்சி எடுத்தது கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது.