சினிமா செய்திகள்

Vijay: தளபதி 69க்கு புளியங்கொம்பை வளைத்த விஜய்.. ராஜதந்திரிகாக காய் நகர்த்தும் தளபதி

By Thenmozhi · 06 மே 2024 · Updated 06 மே 2024
Vijay

விஜய் 69 ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தை தயாரிப்பதில் பல பிரச்சினைகள் சூழ்ந்து வருகிறது. முதலில் இந்த படத்தை தயாரிக்க இருந்தது “ட்ரிபிள் ஆர்” படத்தை தயாரித்த தானய்யா. இவரைத்தான் விஜய் தயாரிப்பாளராக நியமித்திருந்தார்.

தானய்யா இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முன்பே இதை வைத்து விஜய்க்கு தெரியாமல் வியாபாரம் செய்து விட்டார். இது விஜய்க்கு பிடிக்காமல் அவர் தயாரிப்பதை தடுத்து விட்டார். அதன் பின் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் என பலபேர் இதற்கு அடிபோட்டனர்.

ராஜதந்திரிகாக காய் நகர்த்தும் தளபதி

விஜய் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் இப்பொழுது புளியங்கொம்பை பிடித்துள்ளார். “பிரஸ்டீஜ் குரூப்” கே பி என் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பு கொடுத்துள்ளார்

கே பி என் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குரூப். இவர்கள்தான் கேஜிஎப் ஹீரோ யாஸ் வைத்து “டாக்சிக்” என்னும் படத்தை எடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு தான் விஜய் வலை விரித்து இருக்கிறார். இவர்களிடம் தான் பணம் கொட்டி கிடக்கிறது .

கே பி என் குரூப்பை விஜய் செலக்ட் செய்ததற்கு மற்றும் ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இவர்கள் படத்தை எந்த ஒரு நிதி நெருக்கடி இல்லாமல் எளிதாக முடிப்பார்கள் என்றும். எவ்வளவு சம்பளத்தை உயர்த்தினாலும் கொடுக்கக்கூடிய வல்லமை இருப்பதால் இவர்களை வளைத்து விஜய் ராஜதந்திரியாக செயல்படுகிறார்.