சினிமா செய்திகள்

2024 இல் தடுமாறும் தமிழ் சினிமா.. 20 ஆண்டுகளுக்குப் பின் ரீ ரிலீஸாகும் விஜய்யின் ஹிட் படம்

By Arun · 04 ஏப் 2024
vijay

Vijay : விஜய் எப்போதுமே தமிழ் சினிமா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அதை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்படுவார். அவ்வாறு கோவிட் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. பல மாதங்களுக்குப் பின் தியேட்டர் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் வர அஞ்சினர்.

இதனால் பெரிய நடிகர்கள் யாரும் தங்களது படங்களை வெளியிட முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் தைரியமாக 50 சதவீத இருக்கைகள் இருந்த போதும் மாஸ்டர் படத்தை விஜய் வெளியிட்டார். அந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது.

அதன் பிறகு வழக்கம் போல மக்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதியது. இதேபோல் 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை தற்போது வரை தமிழ் சினிமா பார்க்கவில்லை. மேலும் மலையாள மொழி படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரீ ரிலீஸாகும் விஜய் கில்லி

பிரேமலு, மஞ்சுமால் பாய்ஸ் போன்ற படங்களை தொடர்ந்து ஆடு ஜீவிதம் படமும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது மீண்டும் தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் வகையில் விஜய்யின் கில்லி படம் ரிலீஸ் ஆகிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் கில்லி படம் வெளியானது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா காம்போவில் கில்லி படம் வெளியாகி இருந்தது. விஜய்யின் முந்தைய பட வசூல் சாதனையை இப்படம் முறியடித்து இருந்தது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 20ஆம் தேதி கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர். இதன் மூலம் மீண்டும் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தமிழ் சினிமா வீழ்ச்சி அடையும் நேரங்களில் விஜய் தான் தன் படங்கள் மூலம் வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்கிறார்.