Actress Devyani: 90களில் டாப் நடிகையாக ஹோம்லி லுக்கில் வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் தற்போது சின்னத்திரையிலும் மவுசு குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் தொடர்ந்து இயக்குனர் ராஜகுமரனின் நான்கு படங்களில் நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதுவும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன்தான் இணைந்து நடிப்பார் என இனியாவின் தந்தை இயக்குனர் ராஜகுமாரன் தன்னுடைய பேராசையை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் முதல் முதலாக தேவயானி வைத்து இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘நீ வருவாய் என’ என்ற படத்தை முதலில் அஜித், விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் விஜய் ரொம்ப பிசியாக இருந்ததால் அவருக்கு பதில் பார்த்திபன் அஜித்துடன் நடித்து ஹிட் கொடுத்தார். எனவே முதல் பாகத்தில் தான் விஜய் நடிக்கலை, இரண்டாம் பாகத்திலாவது அவருடைய மகனை நடிக்க விடுங்கள் என்று அவரிடமே நேரடியாக கேட்கப் போகிறாராம்.
மேலும் ‘நீ வருவாய் என 2’ படத்தின் முழு ஸ்கிரிப்டும் ரெடியாகிவிட்டதாம். இந்த ஸ்கிரிப்ட்டை இதுவரை 10 பேரிடம் சொல்லி இருக்கிறாராம். அந்த பத்து பேரும் அவர்களை அறியாமலேயே கண் கலங்கியுள்ளனர். அந்த அளவிற்கு இந்த படம் ரொம்பவே உருக்கமான கதையாக இருக்குமாம்.
நீ வருவாய் என 2 படத்தில் இரண்டு கதாநாயகன்கள் மற்றும் ஒரு இளம் கதாநாயகி இருப்பதாக கதையை உருவாக்கி இருக்கிறார். அந்த இளம் கதாநாயகி தன்னுடைய மகள் இனியா தான் என்பதை அடித்துச் சொல்கிறார். இரண்டு கதாநாயகர்களில் ஒருவர் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் 2வது ஆள் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரமன் என்பதையும் உறுதியாக சொல்கிறார்.
செம காம்பினேஷனில் இயக்குனர் ராஜகுமாரன் தயாரித்து வைத்திருக்கும் இந்த பிளான் நிறைவேற வேண்டும் என ரசிகர்களும் எண்ணுகின்றனர். ஆனால் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிப்பதை காட்டிலும் இயக்குனராக வேண்டும் என்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால் காலப்போக்கில் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவருடைய அப்பா விஜய் சீக்கிரம் அரசியலுக்கு செல்ல இருப்பதால், அவருடைய இடத்தை மகனை வைத்து நிரப்பவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இயக்குனர் ராஜகுமாரனின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.