சினிமா செய்திகள்

பொழப்பு கெட்டுடும்னு ரூட்டை மாற்றிய விக்ரம்.. ஆமை வேகம் வேலைக்காவாதுன்னு 32 அடி பாயும் சீயான்

By Vijay · 24 மார்ச் 2024 · Updated 12 மே 2025
vikram-actor

Actor Vikram: பொன்னியின் செல்வன் 2க்கு பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பல முயற்சிகளுக்குப் பிறகும் கூட அந்த படம் வெளிவருவது சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கிறது.

சரி தங்கலானாவது வெளிவரும் என்று பார்த்தால் அதுவும் தாமதமாகி கொண்டே போகிறது. அதுவும் இல்லாமல் VFX சம்பந்தப்பட்ட வேலைகள் ரொம்பவும் இழுத்தடித்து வருகிறது.

இதனால் விக்ரம் கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாராம். ஏனென்றால் இப்படத்திற்காக அவர் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்.

பாய்ச்சலுக்கு தயாராகும் விக்ரம்

அது குறித்த மேக்கிங் வீடியோவே படு மிரட்டலாக இருந்தது. அதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உச்ச கட்டத்திற்கு உயர்த்தியது. ஆனால் படம் இன்னும் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏக வருத்தம் தான்.

இதனால் நொந்து போன விக்ரம் இனிமேலும் இதை நம்பி பிரயோஜனம் இல்லை என அடுத்த வேலையில் இறங்கி விட்டார். அதன்படி தற்போது இவர் சித்தா பட இயக்குனருடன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வடிவில் வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவும் இதில் இணைந்தார். இதுவே ஆர்வத்தை தூண்டி இருந்தது.

அந்த வகையில் இந்த கூட்டணியின் சீயான் 62 படப்பிடிப்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது. திருத்தணியில் நடக்கும் இந்த ஷூட்டிங் இடைவிடாது நடைபெற உள்ளது.

எக்காரணம் கொண்டும் படம் தாமதமாகி விடக்கூடாது என்பதில் விக்ரமும் கவனமாக இருக்கிறாராம். ஆக மொத்தம் ஆமை போல் இல்லாமல் 32 அடி பாய்ச்சலோடு களம் இறங்க இருக்கிறார் சீயான்.