சினிமா செய்திகள்

சுயநினைவு இல்லாத நிலையிலும் விஜய் ஞாபகம் தான்.. நெகிழ்ந்து போன வில்லன் நடிகரின் மனைவி

By Vijay · 13 மார்ச் 2024
thalapathy vijay

Actor Vijay: பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலக்கி வரும் விஜய்க்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களும் உண்டு. ஆனால் அவர்களை காட்டிலும் விஜய் மீது தீராத பற்று கொண்ட ஒரு ரசிகரும் இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் சுயநினைவு இல்லாத நிலையில் கூட அவருக்கு விஜய் மட்டும் நினைவில் இருந்திருக்கிறார். இதை நிச்சயம் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை என நாசரின் மனைவி தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு அவருடைய மகன் பைசல் விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது பெற்றவர்கள் கூட யார் என்று அடையாளம் தெரியாத நிலையிலும் கூட அவருக்கு விஜய் மட்டும் ஞாபகத்தில் இருந்தாராம்.

விஜய் மீது தீராத பற்று கொண்ட பைசல்

அவருடைய நிலையை கேள்விபட்ட விஜய் கூட உடனே நாசர் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு தளபதியின் தீவிர ரசிகரான பைசல் இன்று ஒரு வழியாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முழு காரணம் விஜய் மட்டும் தான் என நாசரின் மனைவி கமீலா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் கட்சி ஆரம்பித்ததை பார்த்ததுமே அவருடைய மகன் உற்சாகமாகி விட்டாராம். அதிலும் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்ததுமே கட்சியில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை செய்தும் காட்டியிருக்கிறார்.

இதைப் பற்றி பகிர்ந்துள்ள நாசரின் மனைவி விஜய்யின் அரசியல் வருகையை புகழ்ந்தும் பேசியுள்ளார்.