வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வியாபார ரீதியாக முதல் 6 இடத்தை பிடித்த ஹீரோக்கள்.. டல்லடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு சில நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் படங்கள் வெளி வந்தாலே அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது. அப்படிப்பட்ட அந்த நடிகர்கள் வியாபார ரீதியாக எவ்வளவு லாபத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: இவர் நடிக்கும் படங்கள் பார்ப்பதற்கு ஆர்வமாகவும் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் தான் இருக்கும். அத்துடன் இவரது படங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படமாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டார் என்ற முத்திரையை பதித்தவர். இவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டைலும் சின்ன குழந்தைகளும் பாலோவ் பண்ற அளவுக்கு அழகாக நடிப்பவர். இவரை கொண்டாடாத ரசிகர்கள் யாரும் கிடையாது. அத்துடன் இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருவார்கள். இவரது படங்கள் பொதுவாகவே பாக்ஸ் ஆபிஸில் அதிக வெற்றியை தான் கொடுத்திருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் சுமார் 240 கோடி வசூலை பெற்றது.

Also read: ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

விஜய்: இவர் நடிக்கும் படங்கள் விறுவிறுப்பாகவும், இவரின் படங்கள் வெளி வருவதற்கு முன்னாடியே பாடல்கள் வெளிவந்து சின்ன குழந்தைகளை முணுமுணுக்க செய்யும் அளவிற்கு இருக்கும். இவருடைய நடிப்பு, டான்ஸ், காமெடி, சண்டை காட்சிகள் எல்லாமே அற்புதமாக செய்து மிக உச்சத்தில் இருக்கக்கூடியவர். இவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஆரவாரத்துடன் பார்ப்பார்கள். அத்துடன் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வசூல் செய்தது. மேலும் இவரை வசூல் ஆட்டநாயகன் என்றும் கூறலாம்.

அஜித்: இவர் பெயர் சொன்னதுமே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது இவருடைய தன்னம்பிக்கையான போராடக்கூடிய விஷயம் தான். அந்த வகையில் சினிமாவில் அதிகமான கஷ்டங்களையும் தாண்டி இப்பொழுது ஒரு முன்னணி ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் நடித்து வெளிவரும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள். அத்துடன் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் இவர் நடித்த படங்களை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வெற்றி பெற்றது.

Also read: யாராலும் நடிக்க முடியாத கமலின் அந்த கதாபாத்திரம்.. இன்று வரை வரலாறு படைக்கும் கமல்

கமல்: இவரது படங்கள் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு அதை அழகாக நடித்துக் கொடுப்பதில் சகலகலா வல்லவன் என்றும் நடிப்புக்கு நாயகன் என்பதால் உலகநாயகன் என்னும் படத்தை ரசிகர்களிடமிருந்து வாங்கிக் கொண்டவர். இவர் நடிப்பு, டான்ஸ், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல பரிமாணங்களில் இவரை அர்ப்பணித்து டாப் ஹீரோவாக வந்திருக்கிறார். இவர் நடித்த விக்ரம் படம் சுமார் 440 கோடி வசூலை கொடுத்தது.

சிவகார்த்திகேயன்: ஒரு தொகுப்பாளராக இருந்து தற்போது அசுர வளர்ச்சியில் முன்னேறிய நடிகர் என்று இவரை சொல்லலாம். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இவரது படங்களுக்கு ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். அத்துடன் சின்ன குழந்தைகளுக்கு பிடிக்கும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரது படங்கள் வணிக ரீதியாக அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இவர் நடித்த டான் திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிரின்ஸ் திரைப்படம் கொஞ்சம் டல்லாக அமைந்துவிட்டது.

சூர்யா: நடிப்பில் பெரிய ஆர்வமே இல்லாமல் சினிமாவிற்குள் வந்த இவர் நடித்த முதல் படமான நேருக்கு நேர் படத்திலிருந்து நடிப்பிற்குள் மூழ்கி விட்டார் என்றே சொல்லலாம். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி கச்சிதமாக நடித்துக் கொடுப்பதில் மிகச்சிறந்த நடிகர். இவரது படங்கள் ஏதாவது ஒரு மையக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் நடிக்கக் கூடியவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் எதிர்பார்த்து அளவில் இல்லை என்றாலும் கடைசியாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

Also read: பிரம்மாண்டமாக நடக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

Trending News