வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு.. ஓவர்சீஸ் பிசினஸில் வாரிசை 50% கூட தொடமுடியாத அஜித்

பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்களும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மோதிக்கொள்ள இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்பதை காண ஒட்டுமொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே கிட்டத்தட்ட 280 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இப்படி ஒரு சாதனையை வேறு எந்த படமும் செய்யவில்லை என்னும் அளவுக்கு இந்த வியாபாரம் ஒரு சாதனையாக இருக்கிறது. இதுவே வாரிசு திரைப்படத்தின் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை காட்டுகிறது.

Also read : அஜித்திற்கு மிக நெருக்கமான 5 பேர்.. ஆரம்பத்தில் இருந்தே நல்லதை மட்டுமே கற்றுக் கொடுத்த வில்லன் நடிகர்

அது மட்டுமில்லாமல் ஓவர் சீஸ் மார்க்கெட்டை பொருத்தவரையில் அஜித்தை விட விஜய்க்கு எல்லா பக்கமும் சாதகமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் வெளிநாடுகளில் விஜய்க்கு அதிக மவுசு இருக்கிறது. இப்போது துணிவு திரைப்படத்தை வாங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அதை அதிக தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார். இதனால் வாரிசு திரைப்படத்திற்கு கிடைக்கக்கூடிய தியேட்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பரபரப்பான சூழ்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் ஓவர் சீஸ் பிசினஸ் மந்தமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கவும் பல பெரிய நிறுவனங்கள் தயங்கி வருகிறதாம். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விவேகம், வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாதது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Also read : அஜித் சார்ன்னு கூப்பிட முடியாது.. சர்ச்சையை கிளப்பிய விஷாலின் தடாலடி பேச்சு

இதுவே துணிவு திரைப்படத்திற்கான பின்னடைவாகவும் அமைந்துள்ளது. இதை முன்னணி விநியோகஸ்தர்களே தற்போது சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படம் தற்போது வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகவில்லை. தற்போது வாரிசு திரைப்படம் ஓவர்சீஸ் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் பலத்த அடி வாங்கி இருப்பது படகுழுவினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் படம் வெளிவந்த பிறகு யார் பாக்ஸ் ஆபிஸை பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும் என அஜித் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். ஆதலால் வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read : விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்

Trending News