திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரலில் ரிலீசான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

அதிரடி திரில்லர் படமான பீஸ்ட் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தின் பாடல்களான ‘அரபிக் குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி யூடியூபில் மில்லியன் வியூக்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் ‘அரபிக் குத்து’ பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். சிவாவின் பாடல் வரிகள் மற்றும் அனிருத்தின் இசை சேர்ந்து தியேட்டர்களை அதிர செய்தது.

Also Read: வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி

கோடிகளில் லைக் மற்றும் மில்லியனில் வியூஸ் என பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் இந்த இரண்டு பாடல்களுக்கும் நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஜானி. இந்த பாடல்கள் மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்ததால் இவரின் ஆட்டிடியூட் மொத்தமாக மாறிவிட்டதாம்.

இப்பொழுது அவர் கொம்பன், விருமன் பட இயக்குனர் முத்தைய்யா வின் படம் மற்றும், நடிகர் ஆர்யாவின் படம் என இரண்டு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த படப்பிடிப்புகளில் இவர் கொடுக்கும் அலப்பறைகள் தாங்க முடியவில்லையாம். திடீரென்று முன்னறிவிப்பின்றி பாடல் காட்சிக்காக 500 கிலோ மீன் வேண்டுமென்று கேட்டுவிட்டாராம்.

Also Read: தன் பெயரிலேயே விஜய் நடித்த 7 திரைப்படங்கள்.. அதுல பாதி படம் அவரை சோதித்துவிட்டது

இதே போன்று 300 லாரிகள், 800 கிலோ ஸ்வீட்டுகள் என முன்னறிவிப்பின்றி உடனடியாக வேண்டும் என்று சொல்கிறாராம். இதனால் அந்த படக்குழு பயங்கர டென்ஷனில் சுத்துகிறார்களாம். பீஸ்ட் படத்தின் அந்த 2 பாடல்கள் ஹிட் ஆனாதாலேயே இப்படி ஆட்டிடியூட் காட்டுகிறார், இவருடைய இம்சை தாங்க முடியவில்லை என யூனிட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

ஜானி மாஸ்டர் தெலுங்கு இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர். இவர் முதன் முதலில் தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலில் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து 90 ml, பட்டாசு, டாக்டர், மாறன், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் பணியாற்றினார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஹிட் ஆன ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கும் இவர் தான் நடனம் அமைத்தார்.

Also Read: லோகேஷ் பூஜையே போடல, பல நூறு கோடி பிசினஸ்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் தளபதி 67

Trending News