‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இதுவரை ‘D56’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு ‘படையல்’ எனப் பெயரிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த தனுஷ்- வடிவேலு கூட்டணி தற்போது அமையவுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ‘படிக்காதவன்’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் படத்திலிருந்து வடிவேலு விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் வடிவேலு ‘மாமன்னன்’, ‘மாரீசன்’ போன்ற படங்களில் நடித்ததைப் போல குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? அல்லது தனது வழக்கமான பாணியில் நகைச்சுவை வேடத்தில் கலக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.




