வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஹெச் வினோத்தை அசிங்கப்படுத்திய 3 ஹீரோக்கள்.. கடுப்பாகி, வேற பிளான் போட்ட சம்பவம்!

Director H Vinodh’s next film update: தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர்தான் இயக்குனர் ஹெச் வினோத். இவருடைய முதல் படம் சதுரங்க வேட்டை, அதன் பின் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற மூன்று படங்களையும் வினோத் தான் இயக்கி நான்கு வருடங்களாக அவருடனே இருந்தார்.

இப்போது வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ணலாம் என்று நினைத்திருக்கையில் மூன்று ஹீரோக்கள் அவரை அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். முதலில் தனுஷின் ஹெச் வினோத் கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். ஆனால் செம பிசியாக இருக்கும் தனுஷ், இப்ப வரைக்கும் வரவில்லை.

அதன் பின் உலக நாயகன் கமலிடம் பேசி அடுத்த படத்திற்கு ஓகே வாங்கிய ஹெச் வினோத் படத்திற்கான வேலைகளை எல்லாம் ஸ்டார்ட் பண்ணி வைத்துவிட்டு, கமலை அழைத்த போது உலக நாயகன் கொஞ்சம் கூட கண்டுக்கவில்லை. அவரை நம்பி இப்ப வரை படம் எதுவும் பண்ணாமல் காத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: நமத்து போன படம்னு பாதியிலேயே நிறுத்திய கமலின் 5 படங்கள்.. அஜித்தின் இயக்குனருக்கு போட்ட கோவிந்தா

ஹெச் வினோத் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்

இப்படியே ஹெச் வினோத் எந்த படத்தையும் எடுக்காமல், ஒரு வருடம் வீணாவே போச்சு. இதனால் வெறுத்துப்போன ஹெச் வினோத் மறுபடியும் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க ஆசைப்பட்டார். ஆனால் கார்த்தி வருகிறேன் வருகிறேன் என வாயிலையே வடை சுட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதனால் கடுப்பான ஹெச் வினோத் தரமான சம்பவத்தை செய்ய முடிவெடுத்துள்ளார். முதலில் காமெடியனாகவும் இப்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் யோகி பாபுவை வைத்து அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய தனுஷ், கமல், கார்த்தி ஆகியோர் ஒரு பெரிய இயக்குனர் என்று கூட பார்க்காமல் ஹெச் வினோத்தை வைத்து காமெடி பண்ணி விட்டனர்.

அவர்களுக்கெல்லாம் யோகி பாபுவை வைத்து தரமான படத்தை எடுத்து பதிலடி கொடுக்கப் போகிறார். இந்த படம் அரசியல் நையாண்டியுடன் கூடிய காமெடி படமாக உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பும் உடனடியாக துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: முன்னணி ஹீரோக்களுக்கு லக்கி ஆன 5 டைரக்டர்.. எப்படி கோல் போட்டாலும் வசூலில் வேட்டையாடும் லோகி

Trending News