திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கைவிட்ட கமலால் எச் வினோத் செய்த ராஜதந்திரம்.. திமிங்கலத்தை விட்டுட்டு 2 சுறாக்கு விரித்த வலை

H.vinoth changed his plan from kamal: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் மூலம் தன்  திறமையை நிரூபித்த ஹச் வினோத்திற்கு அஜித்துடன் ஆன கூட்டணி மேலும் பலத்தை சேர்த்தது. அஜித்துடன் நேர்கொண்ட பார்வையில் இணைந்த வினோத்,  நோ என்றால் நோதான் என்று அஜித்தின் பிம்பத்தை அப்படியே திரையில் காட்டினார்.

இதனை தொடர்ந்து வலிமையில் இந்த கூட்டணி கொஞ்சம் வலிமை இழந்து போனாலும் தோல்விக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து நேர்த்தியான கதை அம்சத்துடன் மீண்டும் துணிவில்  பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் பின் இருவரும் இரு வேறு பாதையில் வெவ்வேறு கூட்டணியுடன் பயணப்பட தொடங்கினர்.

துணிவிற்கு பின் சிறிது பிரேக் எடுத்த அஜித் பைக்கில் சில லாங் ரைடுகளை முடித்துவிட்டு மகிழ்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக விடாமுயற்சி டீம் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜானை முற்றுகையிட்டுள்ளது. மேலும் வினோத்தோ கமலுடன் KH233 இல் கமிட் ஆனார்.

Also read:உலக நாயகன் தயாரித்து முக்காடு போட்ட 5 படங்கள்.. முழு சொத்தை முழுங்கிய விஸ்வரூபம்

உலக நாயகன் கமலுக்கு சங்கரின் இந்தியன் 2, மணிரத்தினத்தின் தக்லைப் முதலான  படங்களில் திட்டமிட்டபடி  வேலை முடியாததால் இப்போதைய சூழ்நிலையில் உலக நாயகனுக்கு வினோத்துடன் படம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக  அஜித்துடன் மீண்டும் இணையலாமா  என்று அஜித்தை அணுகியுள்ளாராம். ஏற்கனவே அஜித்துடன் இணைய விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சிறுத்தை சிவா என வரிசை கட்டி நிற்கையில் இவர்களின் கூட்டணி சாத்தியப்படுமா என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மேலும் ஏற்கனவே தயாராகியுள்ள தீரன் அதிகாரம் 2 கதையை கார்த்தியிடம் சொல்லி இருக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்றின் வெற்றியை ருசித்த கார்த்தியும் இக்கதைக்கு  ஆர்வமாக உள்ளதால் கார்த்தி ஓகே சொன்னதும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு வருகிறார் ஹச் வினோத்.

Also read: புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

Trending News