திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

நடிகர் விஜய்க்கு இந்த வருட ரிலீஸ் ஆக வெளியாகி இருப்பது இயக்குனர் வம்சியின் வாரிசு திரைப்படம். பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறது விஜயின் இந்த படம். வாரிசு படத்தின் தாக்கம் குறைவதற்கு முன்பே தனது அடுத்த கட்ட வேலையை தொடங்கிவிட்டார் நடிகர் விஜய்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜயின் 67வது படத்தின் அப்டேட் வெளியாகிவிட்டது. வாரிசு பட ரிலீஸ் அன்றைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துவிட்டார். நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைந்துவிட்டது.

Also Read: கொஞ்சம் கூட நாகரிகம், அறிவே இல்லாத மிஸ்கின்.. மேடையில் பேச கூட தகுதி இல்ல

மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொருத்தவரை, நடிகர்கள் கார்த்தி, விஜய், கமலஹாசன் ஆகியோருக்கு ஒரு லக்கி சார்மாகவே இருக்கிறார். மேலும் இன்றைய கோலிவுட்டின் ஒரு அடையாளமாகவும் இருக்கிறார்.

தளபதி 67 திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்றும், கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது என்றும், இந்த படத்தில் விஜய்க்கு மொத்தம் ஏழு வில்லன்கள் இருப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. இதில் இதுவரை மிஸ்கின் , விஷால், சஞ்சய் தத் ஆகியோர் உறுதியாக இருக்கின்றனர். இன்னும் சில நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Also Read: அனைத்து இயக்குனர்களும் கேவலமாக பேசும் மிஸ்கின்.. தற்போது ஒரு இயக்குனரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் தளபதி 67 படத்தின் பரபரப்பான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அப்போது பேசியவர் இந்தப் படத்தில் தனக்கும், நடிகர் விஜய்க்கும் பரபரப்பான அதிரடி சண்டை காட்சிகள் இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பக்காவாக நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸே தளபதி 67ல் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் நடிகர் விஜய்யை தனக்கு யூத் படத்திலிருந்து தெரியும் எனவும், அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே இன்றும் இருக்கிறார் எனவும், முன்பை விட இன்னும் இளமையாக இருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார். அதேபோன்று அந்த நேரத்தில் எப்படி பேசினாரோ அதிலிருந்து சற்று மாறாது இன்று வரை அதே மரியாதையுடன் பேசுகிறார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் எடுக்கும் திறமையையும் பாராட்டி இருக்கிறார்.

Also Read: உலகநாயகனுக்காக எழுதிய கதையில் தளபதி விஜய்.. இயக்குனர் மிஷ்கினின் புது அவதாரம்

Trending News