சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

Pa. Ranjith Upcoming movies: கமர்சியல் மற்றும் வியாபாரங்களுக்கு பின்னால் ஓடாமல், தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை தெளிவாக திரைப்படமாக எடுக்கக்கூடிய இயக்குனர் தான் பா ரஞ்சித். இவருடைய படங்கள் என்றாலே ஜனரஞ்சகமான ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

தங்கலான்: சீயான் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். இந்த படம் சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவில் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்களின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. சமீபத்தில் மாஸ் ஹிட் அடித்த கே ஜி எஃப் படத்தை விட இது மிகப் பெரிய வெற்றி அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Also Read:அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

சார்பட்டா பரம்பரை 2: நடிகர் ஆர்யாவுக்கு மதராசபட்டினம் படத்திற்கு பிறகு அவர் சீரியஸாக நடித்து ஹிட் கொடுத்த படம் தான் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பசுபதியும் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜெர்மன்: இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படம் எடுத்து ஹிட்டடித்த பிறகு அவர் சூர்யாவுடன் படம் பண்ண வேண்டும் என்பது சூர்யா ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. அதற்காக பேசப்பட்ட கதை தான் ஜெர்மன். இந்த படம் ரஞ்சித்திற்கு கனவு படம் என்று கூட சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read:VFX ஆல் தள்ளிப்போகும் 3 படங்களின் ரிலீஸ்.. 2024 பொங்கல் பண்டிகையையும் தவறவிட்ட இந்தியன் 2

பா.ரஞ்சித் – கமலஹாசன்: சினிமா மீது அதீத காதல் கொண்ட இளம் இயக்குனர்களுடன் இணைவதில் கமல் கடந்த சில வருடங்களாகவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் படத்திலும் நடிக்க இருக்கிறார். ரஞ்சித் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கபாலி மற்றும் காலா படங்களை கொடுத்திருந்தார். இப்போது உலகநாயகனுடனும் இணைய இருக்கிறார்.

பா.ரஞ்சித் – கார்த்தி – நடிகர் கார்த்தியின் சிறந்த படங்களில் முதலிடத்தில் இருப்பது தான் மெட்ராஸ். அட்டகத்தி படத்திற்கு பிறகு ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து முன்னணி ஹீரோக்களை இயக்குவதற்கு ரூட் போட்டு கொடுத்தவர்தான் கார்த்தி. மெட்ராஸ் படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயன், தனுஷ் போல பேராசைப்படாமல் காய் நகர்த்தும் ஹீரோ.. கையில் இருக்கும் ஒரு டஜன் படங்கள்

 

Trending News