Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒரு ஹிட் போதும், ஹீரோ அவதாரம் எடுத்த இயக்குனர்.. பிரதீப்புக்கு சரியான போட்டி தான்

ஒரு ஹிட் போதும், ஹீரோ அவதாரம் எடுத்த இயக்குனர்.. பிரதீப்புக்கு சரியான போட்டி தான்

Pradeep Ranganathan : பெரும்பாலான இயக்குனர்கள் இப்போது நடிகர்களாக மாறிவிட்டனர். கௌதம் மேனன், மிஸ்கின், செல்வராகவன் போன்ற இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சூழலில் இளைய தலைமுறையினர் ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்துவிட்டு ஹீரோ அவதாரம் […]

Pradeep Ranganathan : பெரும்பாலான இயக்குனர்கள் இப்போது நடிகர்களாக மாறிவிட்டனர். கௌதம் மேனன், மிஸ்கின், செல்வராகவன் போன்ற இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சூழலில் இளைய தலைமுறையினர் ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்துவிட்டு ஹீரோ அவதாரம் எடுத்து விடுகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து லவ் டுடே படத்தில் அவரே இயக்குனர் மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் இறங்கினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் டியூட் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளது. இப்போது பிரதீப் ரங்கநாதன் போலவே ஹீரோ அவதாரம் எடுக்கிறார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்.

பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக இறங்கும் இயக்குனர்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அபிஷன் ஜீவந்த். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய பெயரையும், பாராட்டையும் வாங்கி கொடுத்தது. இவர் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அபிஷன் கதாநாயகனாக களம் இறங்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அணஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி இணை இயக்குனர் இயக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் Corrected Machi என்று சொல்லப்படுகிறது.

மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகின்றனர். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் இப்போது கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.