வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இணையத்தில் கசிந்த டான் படக்கதை.. 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்போகும் சிவகார்த்திகேயன்

ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம் தான். ஆனால், சில உண்மையான தகவல்களும் வெளியாகி இருப்பது பல படங்கள் வெளியான பிறகு இரண்டும் ஒன்றாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அறிமுகமானது முதல் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் தன்னை ஒரு முன்னணி நாயகனாகவும், கோலிவுட்டின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவாக்கி கொண்டுள்ளார். பெரும்பாலும் இளைய தலைமுறையினரையும், குடும்பங்களையும் கூறி வைத்து அவர் படம் பண்ணுவதே அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லீயிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று தான் இதுவரை பேச்சுக்கள் எழுந்து வந்தன.

டான் படத்தில் இருந்து வெளியான ஜலபுலஜங் பாடலிலும் தான் ஒரு கல்லூரி மாணவனாகவே தோன்றினார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் புதிய கதை ஒன்று வலம் வருகிறது. அதன்படி டான் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல, பிறந்த முதல் நாள் முதல் 30 வயது வரை ஏரியாவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் குரல் கொடுத்து வருகிறார்.

இதன் மூலம் எப்படி ஒரு பெரிய டானாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாம். இந்த மாதிரி மொக்க கதைகளை வைத்து பல படங்கள் வந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மார்க்கெட்டை வைத்து டாக்டர் பட வசூல் போல 100 கோடி வசூலைத் தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்படத்தில், ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இது, இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்த படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் கெளதம் மேனன் வேற கேமியோ ரோலில் வருகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News