மேடையில் ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த கவர்ச்சிப் புயல்.. பத்து பைசா கொடுக்காமல் விரட்டியடித்த சம்பவம்

நடிகை நமீதா தமிழ் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். இவரது நடிப்பிற்கும், இவர் ஆடும் நடனத்திற்கும் இவர் பேசும் மச்சான் என்ற கொஞ்சலுக்கும் இன்று வரை ரசிகர்கள் அதிகம். நடிகை நமீதா சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சின்னத்திரையில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்தவர்.

அந்த சமயத்தில் நமீதா சற்று எடையை அதிகரித்து குண்டாக ஆனா நிலையில், நமீதாவிற்கு பட வாய்ப்புகள் போனது. இதனால் ஆறு வருடங்களுக்கு முன்பு நமீதா அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக கட்சியில் உறுப்பினராக மக்களின் முன்னிலையில் சேர்ந்தார்.

பொதுவாக ஜெயலலிதா கலந்து கொள்ளும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் தனது கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது இரண்டு விரல்களையும் காண்பித்து மக்களை ஆரவாரப்படுத்துவார். அந்த அடிப்படையில் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா தனது கைகளை உயர்த்தி மக்களை ஆரவாரபடுத்தினார்.

அன்றைய தினம் நமீதா, ஜெயலலிதாவின் பின்னால் நின்று கொண்டு அவரும் ஜெயலலிதா போல இரண்டு விரல்களை உயர்த்தி காட்டிய நிலையில், அங்கிருந்த தொண்டர்கள், நமீதாவின் ரசிகர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவிற்கு காட்டிய ஆரவாரத்தை விட நமீதாவிற்கு சற்று அதிகமாகவே கூச்சலிட்டனர்.

இதனால் அந்த மேடையிலேயே ஜெயலலிதாவின் முகம் சற்று மாறியது என்று சொல்லலாம். உடனே ஜெயலலிதா இனி நமீதாவை எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அதுவே நமிதாவின் முதலும் கடைசியும் பொதுக்கூட்டமாகவே அமைந்தது.

ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டால் நமீதாவிற்கு 5 லட்சம் வரை கட்சி சார்பில் தொகை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட தொடர்ந்து  20 பொதுக்கூட்டங்களில் நமீதா கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஜெயலலிதாவின் உத்தரவால் கிட்டத்தட்ட 1 கோடி வரை நமிதாவிற்கு நஷ்டமானது.