மணிவண்ணன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படம் நூறாவது நாள். இப்படத்தில் மோகன், நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திரில்லர் படமான நூறாவது நாள் படம் விறுவிறுப்பான கதை களத்துடன் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நூறாவது நாள் படத்தின் மொத்த ஸ்கோரையும் தட்டிச் சென்றவர் சத்யராஜ். இந்த படத்தில் அவரது காட்சிகள் மிகவும் குறைவு தான். ஆனால் இந்தப் படத்திற்காக சத்யராஜ் மொட்டை போட்டு இருந்தார். அவரது தோற்றம் அப்படியே வில்லன் கெட்டப்புக்கு ஏற்றவாறு இருந்தது.
மேலும் ஒரு ரவுண்ட் கண்ணாடியுடன் நளினியை கொலை செய்ய சத்யராஜ் தேடும்போது அந்த திக் திக் நிமிடங்கள் ரசிகர்களை சீட்டின்க்கு நுனிக்கு வரச் செய்தது. ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை பதறவைத்த காட்சிகள் அவை. சத்யராஜின் கேரியரிலேயே மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தான் சத்யராஜுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி தனக்கான இடத்தை சத்யராஜ் பிடித்தார். அதிலும் பாகுபலி படத்தில் இவரது கட்டப்பா கதாபாத்திரத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நூறாவது நாள் படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வாகி இருந்தது வேறொரு நடிகராம். அதாவது விஜயகாந்தின் ரமணா படத்தில் நடித்த விஜயன் தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்ததாம். இவர் 7 ஜி ரெயின்போ காலனி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ஒரு சில காரணங்களால் விஜயனால் நூறாவது நாள் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்பு தான் சத்யராஜ் தேர்வாகி நடித்திருந்தார். இப்படத்தில் மட்டும் ஒரு வேலையை சத்யராஜ் நடிக்காமல் போயிருந்தால் அவரது திறமை வெளியில் வராமல் போயிருக்கும்.