வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

சின்னத்திரை தொடர்களின் மூலம் அறிமுகமான வாணி போஜனுக்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதுமட்டுமின்றி அப்போது சின்னத்திரை நயன்தாரா என்று வாணி போஜன் அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் வாணி போஜனுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு இப்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் இவரது அழகில் மயங்கி டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.

ஜெய் : ஜெய் மற்றும் வாணி போஜன் இணையான சர்ச்சை இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக ஒரு சமயத்தில் மாறியது. பயில்வான் ரங்கநாதனே ஒரு முறை தனது யூடியூப் சேனலில் இது பற்றி கூறியிருந்தார். அதாவது வாணி போஜனிடம் இயக்குனர்கள் கதை சொல்லப் போனால் எப்போதுமே ஜெய் அவரது அருகிலே இருக்கிறாராம். இதனால் இயக்குனர்கள் வாணி போஜனிடம் கதை சொல்லாமல் திரும்புகிறார்கள் என்ற பயில்வான் கூறியிருந்தார்.

வைபவ் : வைபவ் மற்றும் வாணி போஜன் இருவரும் லாக்கப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இவருடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக ராதா மோகன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான மலேசியா டு அமினிசியா என்ற படத்திலும் வாணி போஜன் நடித்திருந்தார்.

பரத் : முதல்முறையாக வாணி போஜன் உடன் மிரள் என்ற படத்தில் பரத் நடித்திருந்தார். இதில் பரத்தின் மனைவியாக வாணி போஜன் நடித்தார். இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் உடனடியாக தன்னுடைய அடுத்த படமான லவ் படத்திலும் வாணி போஜனையே கதாநாயகியாக போடுமாறு பரத் கேட்டுக் கொண்டாராம்.

கிருஷ்ணா : சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் தொடரில் கதாநாயகனாக நடித்தவர் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக தான் இத்தொடரில் வாணி போஜன் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பானது. இத்தொடரில் நடித்ததன் மூலம் கிருஷ்ணாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது.