ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள ராகவா லாரன்ஸ் இப்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ருத்ரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதை தொடர்ந்து இவரின் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இவர் வலை வீசிய நான்கு நடிகைகள் பற்றியும், அதில் வெளிப்படையாகவே இவரை டேமேஜ் செய்த நடிகையைப் பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.

சினேகா: முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அதில் இவர்கள் இருவருக்கும் பல நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதிலும் குத்துமதிப்பா என்ற பாடலில் இருவரும் போட்ட குத்தாட்டம் அப்போதைய காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேதிகா: தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மற்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் மீண்டும் லாரன்ஸ் கேட்டுக் கொண்டதால் காஞ்சனா 3 படத்தில் நடித்தார். அதனாலேயே இவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக பேசப்பட்டது.

ராய் லட்சுமி: இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கும் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதன் காரணமாகவே இவர்களைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்தது உண்டு.

ஸ்ரீ ரெட்டி: திரையுலகையே ஒரு காலத்தில் அதிர வைத்த பெருமை இவருக்கு உண்டு. பல ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் முகத்திரையை கிழித்த இவர் ராகவா லாரன்ஸ் பற்றியும் பல புகார்களை அடுக்கினார். அவர் தன்னை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் ராகவா லாரன்ஸ் அந்த குற்றச்சாட்டை மறுத்து இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். இதனால் அந்த பிரச்சனை அப்படியே ஓய்ந்து போனது. இப்படி லாரன்ஸை வெளிப்படையாகவே இவர் டேமேஜ் செய்தது கடும் விமர்சனங்களை முன் வைத்தது.