நடிப்பில் ஆர்வம் உள்ள கலைஞன் அடுத்தடுத்து தன் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கே அத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மக்கள் நெஞ்சில் கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் என்றாலே அதற்கு எதிர்பார்ப்பு அதிகம். அந்த வகையில் இவரின் சொந்த முயற்சியில் வெளிவந்து படும் தோல்வியை சந்தித்த 4 படங்களை பற்றி இந்த பார்க்கலாம்.
மாவீரன்: 1986ல் வெளிவந்த இப்படத்தில் ரஜினிகாந்த்,அம்பிகா, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் 1985ல் வெளிவந்த மர்ட் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். மேலும் ராஜசேகர் கதை எழுதி இயக்கிய படம் தான் மாவீரன். இப்படமே 70 எம் எம் திரையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படமாகும். இத்தகைய சிறப்புகள் இருந்தும் இப்படம் போதிய வரவேற்பின்றி டெபாசிட் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளி: 1993ல் கே நடராஜன் இயக்கத்தின் வெளிவந்த படம் தான் வள்ளி. இப்படத்தை ரஜினி தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்டார். மேலும் இப்படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஏமாறக்கூடாது என்பதை கூறும் விதமாக இப்படத்தின் கதை அமைந்திருக்கும். ஆனாலும் இப்படம் இவருக்கு அதிக வசூலை பெற்று தரவில்லை என்பதை வேதனைக்கு உள்ளான செய்தி.
பாபா: 2002ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாபா. இப்ப படத்தை ரஜினி அவர்கள் மகா அவதார் பாபாஜியை மையமாக வைத்து தயாரித்தார். இவரின் சொந்த புரொடக்ஷனான லோட்டஸ் இன்டர்நேஷனலில் இப்படம் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தார் ரஜினி. இருப்பினும் இப்படமும் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.
ராம் ராபர்ட்: 1980ல் ரஜினி நடிப்பு வெளிவந்த தெலுங்கு படம் தான் ராம் ராபர்ட். இப்படம் 1977ல் வந்த அமர் அக்பர் அந்தோணி என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் ரஜினி ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இதில் ஸ்ரீதேவி, சுனிதா, கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி படுத்தாமல் இப்படம் ரஜினிக்கு பெரிய இழப்பை தேடி தந்தது.