தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெண் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த 5 நடிகர்கள் ஒரு கட்டத்தில் எங்கு போனார்களோ என்று தெரியாத அளவிற்கு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தனர். மீண்டும் திரையில் தங்களது செகன்ட் இன்னிசிங்கை தொடங்கியும் இன்று வரை விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரவிந்த்சாமி: தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பெண் ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாகவே வலம் வந்து கொண்டிருந்தார். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை விடுத்து பிற வணிக செயல்களில் ஈடுபட தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று மாசாக ரி என்ட்ரி கொடுத்தார். இருந்தும் தனக்கான ஹீரோ என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் போனது.
மாதவன்: தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் பெண்கள் மனதை கொள்ளை அடித்தவர் மாதவன். இதனைத் தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அவருடைய துள்ளலான நடிப்பால் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். இதனாலையே அவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர். தற்பொழுது இவரே இயக்கிய நடித்த ராகெட்டரி என்ற நம்பி விளைவு படத்தில் மாதவன் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றை கூட சொல்லலாம்.
பிரசாந்த்: தமிழ் சினிமாவில் பிரசாந்த் அளவிற்கு அறிமுகம் யாருக்கும் கிடைத்திருக்காது. அதிலும் இவர் நடித்த முதல் மூன்று படங்களுமே 100 நாட்களுக்கு மேல் ஓடியது மிகக் குறுகிய காலத்திலேயே பாலு மகேந்திரன், ஷங்கர், மணிரத்தினம் என்று முன்னணி இயக்குனர்கள் என அனைவரது படத்திலும் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே பிரச்சினையாக இருந்துவிட சினிமாவிற்கு முழுக்கு போட்டார். அதன் பின்னர் மம்பட்டியான் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் இருந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் மண்ணை கவியது.
கார்த்திக்:பிரபல நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். தமிழில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சியமானவராக மாறினார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்ததன் மூலம் பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஹீரோவாகவே நடித்து வந்த கார்த்திக் ஒரு கட்டத்தில் வில்லனாக தோன்றி புது முயற்சியில் இறங்கினார் இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ராம்கி: தமிழில் சின்ன பூவே, மெல்ல பேசு, பாலைவன பறவைகள், மருதுபாண்டி, கருப்பு ரோஜா என்று ராம்கியின் திரைப்பயணம் 2004 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. அதன் பிறகு ஆளே என்ன ஆனார் என்று தெரியாத அளவிற்கு அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் போனது. பிறகு 10 வருடங்கள் கழித்து மாசாணி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இருந்தும் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் கிடைக்கக்கூடிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இந்த 5 நடிகர்களும் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக பெண் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தனர். இருந்தும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது என்பதே நிதர்சனமான உண்மை.