பாலிவுட் நடிகரை போன்று தமிழ் நடிகர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அரவிந்த்சாமி தான். வெள்ளை வெளேரென்று மொழு மொழுன்னு இருக்கும் அரவிந்த் சாமி மீது ரசிகைகள் மட்டுமல்ல நடிகைகளும் ஒரு மயக்கத்தில் தான் இருக்கின்றனர். அதிலும் திருமணத்திற்குப் பிறகும் இன்றுவரை நடிகை குஷ்பூ, அரவிந்த் சாமி மீது கிரஸ்ஷில் இருக்கிறார்.
குஷ்பூ: 90-களில் இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்த குஷ்பூ, தற்போது மீண்டும் சினிமாவில் ரவுண்டு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய 51 வயதில், 20 வயது கதாநாயகி ரேஞ்சுக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
நடிகை ஒருவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்புவுக்கு தான். அப்படிப்பட்டவர் இன்று வரை நடிகர் அரவிந்த் சாமி மீது கிராஸ்ஷில் இருக்கிறார். அரவிந்த் சாமி தான் தன்னுடைய ட்ரீம் பாய் என்று சொல்லியிருக்கிறார்.
ஹன்சிகா மோத்வானி: பப்ளிமாஸ் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஹன்சிகா, குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். தனுஷ், விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி சேர்ந்தார் ஹன்சிகா.
ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் வராமல் இருந்ததால், தன்னுடைய உடல் எடையை குறைத்த தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. இவரும் குஷ்புவை போன்றே அரவிந்த் சாமியின் தீவிர ரசிகை. மேலும் ஹன்சிகா, அரவிந்த் சாமியை சோ ஸ்மார்ட் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்: கதாநாயகியாகவும் வில்லியாகவும் தமிழ் சினிமாவை கலக்கிய ரம்யாகிருஷ்ணன் 51 வயதாகியும், இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொள்ளும் ரம்யாகிருஷ்ணன், பல மேடைகளில் அரவிந்த் சாமியை தான் சோ ஸ்மார்ட் என்ற கூறுவார்.
ராதிகா: வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராதிகா நடிகர் சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அரவிந்த் சாமியுடன் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லையே என ஏக்கத்துடன் கூறினார்.
நமீதா: மச்சான்ஸ் மறந்துடாதீங்க என ரசிகர்களை கொஞ்சம் நமீதா கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கியவர். அவர் தற்போது நடிகர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு ஐந்து வருடம் கழித்து சமீபத்தில் அவருக்கு இரட்டைகுழந்தை பிறந்துள்ளது. இவருக்கும் அரவிந்த்சாமி தான் கனவு நாயகனாம்.
இப்படி அரவிந்த் சாமிக்கு 90-களில் இருந்த டாப் நடிகைகள் முதல் தற்போது வரை இருக்கும் நடிகைகள் வரை அவர் மீது பைத்தியமாக இருக்கின்றனர். மேலும் அவரை ட்ரீம் பாய் என நினைத்துக்கொண்டு ரசிகைகள் முதல் ஹீரோயின்ஸ் வரை ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.