ரஜினிக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த 5 நடிகைகள்.. படையப்பா என்ன கொடுமை இதெல்லாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தற்போது 72 வயது ஆகிறது. நீண்ட காலமாக சினிமாவில் பயணித்து வரும் ரஜினி 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு காலத்தில் ரஜினிக்கு ஜோடி போட்டு நடித்த நடிகைகள் அதன் பிறகு அவருக்கே அம்மாவாக நடித்துள்ளனர். அந்த 5 நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

லட்சுமி : நடிகை லட்சுமி ஒரு காலகட்டத்தில் ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். அதாவது பொல்லாதவன், நெற்றிக்கண் போன்ற படங்களில் ரஜினியுடன் ஜோடி போட்டு நடித்த லட்சுமி அதன் பின்பு அவருக்கு அம்மாவாகவே நடித்துள்ளார். அதாவது படையப்பா படத்தில் தான் ரஜினிக்கு அம்மாவாக லட்சுமி நடித்திருந்தார்.

சுஜாதா : ரஜினியின் அவர்கள், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது போன்ற எண்ணற்ற படங்களில் ஜோடியாக சுஜாதா நடித்துள்ளார். அதன் பின்பு பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜாதா பாபா படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருந்தார்.

ஸ்ரீவித்யா : ரஜினியின் அபூர்வ ராகங்கள், அலாவுதீனும் அற்புத விளக்கு, நட்சத்திரம், மனிதன், 6 புஷ்பங்கள் போன்ற படங்களில் இணைந்த நடித்தவர் ஸ்ரீ வித்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

சுமித்ரா : புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன் போன்ற படங்களில் நடித்தவர் சுமித்ரா. இவர் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் அஜித்தின் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருப்பார். இந்நிலையில் ரஜினியின் அம்மாவாக பணக்காரன் படத்தில் சுமித்ரா நடித்திருந்தார்.

ஜெயபாரதி : நடிகை ஜெயபாரதி ரஜினி உடன் அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் இளமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தனது சொந்த மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த முத்து படத்தில் சிவகாமி அம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.